ஜாக்கெட் இல்லாமல் சாய் பல்லவி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
சாய் பல்லவி தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ்நாட்டில் கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்டவர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.அதன் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு ஓரளவு அறிமுகமானார்.
இதன் பிறகு அதே 2008 ஆண்டில் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
பிரேமம் படத்தைத் தொடர்ந்து இவர் மலையாளத்தில் களி என்ற படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமாகி பின்னர் தமிழ் திரையுலகிலும் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெளியான தியா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி மாரி 2, என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காகவும்,ரசிகர்களை கவரும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஜாக்கெட் இருக்கா இல்லையா என்ற வகையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.