Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெளியீட்டு தேதி எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் !

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நடிகராக சிலம்பரசன் மாறிவிட்டார். சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல எனும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னட திரைப்படமான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இந்த படத்தில் சிம்பு ஒரு கேங்ஸ்டராக நடித்து இருக்கிறார். சிம்புவுடன் இந்த படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன், டீஜே மற்றும் கலையரசன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை டிசம்பர் மாதமே வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது ஆனால் சிம்புவால் சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பில் சரிவர கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது ‘பத்து தல’ படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு முன்னர் திட்டம் தீட்டியதாகவும் ஆனால் அந்த சமயம் சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் படக்குழு படத்தை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version