Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம், இவருடைய மனைவி கனிமொழி இவர்களுடைய மகள் லாவண்யா, கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கனிமொழி இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, சரண்யா என்பவரை முருகானந்தம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

லாவண்யா தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் இருக்கின்ற தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் 12ம் வகுப்பு படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் சென்ற சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி நிர்வாகமும், விடுதியின் காப்பாளரும், கட்டாய மத மாற்றத்திற்கு ஈடுபடுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, விஷம் குடித்ததாகவும், மாணவி லாவண்யா தெரிவிப்பது போன்ற காணொளியை சமூகவலைதளத்தில் வைரலானது இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்தது.

கட்டாய மதமாற்றம் என்ற புகார்தெழுந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனை அடுத்து குடும்ப சூழ்நிலையின் காரணமாக, பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும், இதன் காரணமாக, படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் சரியாக படிக்க இயலாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும், மனைவி லாவண்யா தெரிவிக்கும் மற்றொரு காணொளியும் வெளியானது.

அதேசமயம் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு தனிப்பட்ட விதத்தில் குடும்ப ரீதியில் பிரச்சனை இருக்கலாம், அவருடைய சித்தி சரண்யாவின் துன்புறுத்தல் காரணமாக, மாணவி தற்கொலை செய்திருக்கலாம், அது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சொல்லப்படுகிறது.

மதம் சார்பான பிரச்சாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்படவில்லை, மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம துன்புறுத்தல் காரணமில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல்செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நடுவில் தன்னுடைய மகளுடைய தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. மாணவி லாவண்யாவின் பெற்றோர் தரப்பில் தமிழக அரசு சார்பாக தூய இருதய மேல்நிலைப்பள்ளி தரப்பு உள்பட பல்வேறு தரப்பு வாதங்களும் சென்ற சில தினங்களாக நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்பு நேற்றையதினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி அதிரடியாக உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

Exit mobile version