பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!!

0
189
Lawyer arrested for negotiating pornographic photo of woman

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!!

திருவள்ளூர் அடுத்து மணவாளநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது பெண்.அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்.விவாகரத்து பெறுவதற்காக இருவரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்தக் கோர்ட்டில் பணிபுரியும் வக்கீலான திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பெரியத் தெருவைச் சேர்ந்த டார்ஜன் வயது 44 அவரை அணுகி உள்ளார்கள்.

நான் இந்த வழக்கைப் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று அந்தப் பெண்ணிடம் கூறினார் டார்ஜன். வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணிற்கு அவர் வாங்கி சென்ற ஆப்பிள் குளிர்பானத்தில் தூக்க மாத்திரை போட்டு அந்தப் பெண்ணுக்கு கொடுத்தார்.அது தெரியாமல் அந்த குளிர்பானத்தை அப்பெண் குடித்து விட்டால் சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கம் அடைந்தால்.

அந்த பெண்ணை நிர்வாணமாக்கி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து பின்னர் அந்தப் பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார் டார்ஜன். கண்விழித்து பார்த்த பெண்ணை நிர்வாணமாக எடுத்த படத்தைக் காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தையும் வாங்கியுள்ளார். வக்கீல் டார்ஜனுக்கு ஆதரவாக அவரது மனைவியும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இதனால் பதறிப்போன அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இதை அறிந்த டார்ஜன் மற்றும் அவரது மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டார்கள்.

இது சம்பந்தமாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்இன்ச்பெக்ட்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான  டார்ஜனை  தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து கொடைக்கானலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று காலை கொடைக்கானலில் அவனை கைது செய்து திருவள்ளுவருக்கு அழைத்து வந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.