Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலுறவினால் ஏற்படும் பாப்பில்லோமா வைரஸ்! எச்சரிக்கை மக்களே!

உடல் நோய் வாய் பட்டது என்றால் நாம் மருத்துவரை அணுகுவது உண்டு. ஆனால் பாலியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் மருத்துவரை சென்று அணுகுவதில் மிகவும் தயக்கம் கொள்கின்றோம்.பாலியல் பிரச்சனைகளுக்கு நாம் மருத்துவரை சென்று அணுக தயக்கம் கொள்வதால் ஆண்களும் பெண்களும் சரி அதிகமான பிறப்புறப்பு பிரச்சினைகளால் பாதிக்க படுகிறார்கள்.

இதில் முக்கியமான ஒன்றுதான் பாப்பிலோமா வைரஸ் என்பது. அது எப்படி பரவுகிறது? அதனால் என்ன விளைவு? அதில் இருந்து எப்படி காத்துக் கொள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

1. பாலியல் நோய்களைப் பரப்பக்கூடிய வைரஸ் தான் இந்த பாப்பிலோமா வைரஸ். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உடன் உடலுறவு கொள்ளும்பொழுது மற்றவர்களுக்கும் இது பரவுகிறது. இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2. அமெரிக்காவில் சராசரி 80 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிப்படைகின்றனர் என விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

3. இந்த நோய் பிறப்புறுப்பில் மருக்கள் மற்றும் பிறப்புறுப்பில் புண், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. ஆனால் இது அறிகுறியே ஏற்படுத்தாது என்று சொல்லுகின்றனர்.

4. அதுமட்டுமில்லாமல் இந்த பாப்பிலோமா வைரஸ்சுக்கு எந்தவித சிகிச்சையும் இல்லை. உடலுறவின் போது நீங்கள் பயன்படுத்தும் காண்டம் போன்றவற்றால் பாதுகாப்பு சாதனங்கள் மட்டுமே இதனை தடுக்க முடியும்.

5. எனவே இதற்கு எதிராக பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை ஆண்கள் பெண்கள் இருவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 10 வயது முடிந்த பெண்களுக்கே நம் நாட்டில் இந்தத் தடுப்பூசியைப் போடுகிறார்கள். இதை இப்போது ஆண்களும் போட்டுக்கொள்ளலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. ஆண்களுக்கு பிறப்புறுப்பில் மரு தோன்றுவது இதனால் தடுக்கப்படுகிறது. வாய், தொண்டை, ஆசனவாய் போன்ற இடங்களில் கிருமிகளால் ஏற்படும் புற்றுநோய் வராது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

6. இதற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி உடலுறவில் ஈடுபடும்பொழுது அவசியமாக பாதுகாப்பு உடன் ஈடுபட வேண்டும்.

எந்தவித பிறப்புறப்பு பிரச்சனைகளாக இருந்தாலும் அதற்கான மருத்துவரை அணுகி உடனடியாக அந்தரங்க பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

Exit mobile version