தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விதிமுறைகள், தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அவருக்கான அதிகாரம் பொறுப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக் கழகமானது தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த பின் கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து அவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது தேர்தல் யோக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் இக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களை சந்தித்து சில முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். இவற்றைத் தொடர்ந்து இந்த கட்சியில் 28 பிரிவுகள் இருப்பதாகவும் அதனுடைய விவரங்கள் வெளியாகி பல விவாதங்களை உருவாக்கியுள்ளன.
சூழ்நிலை இவ்வாறு இருக்க தமிழக வெற்றிக் கழகத்தினுடைய சில முக்கிய சட்ட விதிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன. அவைப் பின்வருமாறு :-
✓ கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் மூலமே கட்சியினுடைய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
✓ நான்காண்டுகளுக்கு ஒரு முறை தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும்.
✓ தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர் நான்கு ஆண்டுகளுக்கு நிறுவன உறுப்பினராக இருத்தல் அவசியம்.
✓ மாவட்ட அல்லது மாநில அளவில் நான்காண்டுகள் நிர்வாகியாக பணியாற்றியவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.
✓ இக்கட்சியின் உடைய தலைவர் பதவி விலகினால் உடனடியாக பொதுக்குழு கூடி இடைக்கால தலைவரை முடிவு செய்யலாம்.
✓ கட்சியினுடைய அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கு இக்கட்சியின் தலைவரே பொறுப்பு.
✓ கட்சியினுடைய சில அவசர முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் தலைவருக்கு உண்டு என்றாலும் கட்டாயமாக அடுத்த நடைப்பெறக்கூடிய பொதுக்குழுவில் அதற்கான ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
✓ கட்சிக்காக செலவழிக்கப்படும் பண பரிமாற்றங்கள் மற்றும் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கட்சி தலைவரின் பெயரில் மட்டுமே அமைதல் வேண்டும்.
✓ கட்சி சார்ந்த அனைத்து முக்கிய இடங்களிலும் கட்சியின் தலைவர் மட்டுமே கையெழுத்திடும் அதிகாரம் கொண்டவராக கருதப்படுவார்.
மேற்கு கூறப்பட்ட அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முக்கிய சட்ட விதிகள். இக்கட்சியின் உடைய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் உடைய சட்ட விதிகளாக இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் பின்பற்றப்படும் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய சட்ட விதிகளாக பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.