சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்சரவணன் அவர்கள் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுக்காக ரூபாய் 10 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது
பிரம்மாண்டமான கண்ணை கவரும் அரங்குகளில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் அஜித் விஜய் படங்களில் படமாக்கப்படும் மாஸ் படத்திற்கு இணையாக இந்த பாடல் காட்சியை உருவாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 100 கோடி என்றும் இந்த படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களுக்கு மட்டுமே ரூபாய் 40 கோடி செலவு செய்யப்படுள்ளதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. வரும் மார்ச் மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது