Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!!! இணையத்தில் டிரெண்ட் ஆகும் புகைப்படங்கள்!!!

#image_title

ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!!! இணையத்தில் டிரெண்ட் ஆகும் புகைப்படங்கள்!!!

லெஜண்ட் சரவணன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமி கொண்டாடும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.

கடந்த வருடம் வெளியான தி லெஜன்ட் திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக லெஜண்ட் சரவணன் அவர்கள் அறிமுகமானார். இவர் தி சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

லெஜண்ட் சரவணன் அவர்கள் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்மறையான கருத்துக்களை பெற்றிருந்தாலும் நடிகர் லெஜண்ட் சரவணன்அவர்களின் நடிப்பை கண்டு அனைவரும் வியந்தனர்.

இந்நிலையில் நடிகர் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் அவ்வப்போது இணையத்தில் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் லெஜண்ட் சரவணன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நேற்று(அக்டோபர்24) ஆட்டோ ஓட்டுநர்களுடன் நடிகர் லெஜண்ட் சரவணன் அவர்கள் விஜயதசமியை கொண்டாடுவதற்கு வந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நீங்கள் எங்களுடன் ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்று கேட்டதற்கு லெஜண்ட் சரவணன் “செல்லலாம். ஆனால் ஒரு கன்டிசன் ஆட்டோவை நான்தான் ஓட்டுவேன்” என்று கூறி தி லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டினார்.

அப்போது பேசிய தி லெஜண்ட் சரவணன் அவர்கள் “நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் அன்பை வாரி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மனிதநேயம் பெருகும். எத்தனை மடங்கு அன்பு நீங்கள் கொடுக்கின்றீர்களோ அத்தனை மடங்கு அன்பு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

மனிதநேயம் தழைக்க வேண்டி நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அன்பு வந்து அனைவருக்கும் ஒரு பாலமாக இருக்கும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Exit mobile version