Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட லேகியம்!

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மட்டுமே உடல் பலவீனம் அடைந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் எந்த விதமான வைரஸ் நம்மை எளிதில் தாக்குகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த லேகியத்தை சாப்பிட்டால் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

1. அக்கிரகார மொட்டு,
2. சாதிக்காய்,
3. வால்மிளகு
4. லவங்கம்,
5. ஏலரிசி
ஆகிய மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்துக்கொண்டு.
அதோடு
சீரகம் ,
அதிமதுரம்
சித்திரமூல வேர் பட்டை
பறங்கிசக்கை இந்த அனைத்து பொருட்களையும் உலர்த்தி சூரணம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒருசட்டியில் 1 லிட்டர் பசு நெய் விட்டு
இந்த சூரணத்தை
தூவி கிளறிவிட்டு
1 கிலோ வெள்ளை சர்க்கரையை 40எலுமிச்சை பழசாற்றில் கரைத்து வடிகட்டிஎடுத்து சட்டியில் சிறுக சிறுக விட்டு கிளறி வீட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
லேகிய பதம் வந்தவுடன் குங்கும பூ, கோரசனை இரண்டும் தலா 4கிராம் சேர்த்து கிளறி இரக்கி ஆரவைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து
காலை மாலை இருவேளை கழச்சிக்காய் அளவு சாப்பிட்டு வர்ற நல்ல பலனை தரும்.

1. உடல் வச்சிரம் போல திடப்படும்.
2. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
3. உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் இருக்கும் இடம் தெரியாமல் போகும்
ஆயுள் கூடும்
4. இந்த லேகியத்தை தொடர்ந்து 48நாட்கள் இச்சா பத்தியம் இருந்து சாப்பிட வேண்டும்.
5. இச்சா பத்தியம் என்பது கணவன் மனைவி தாம்பத்தியம் உறவு வைத்துக்கொள்ள கூடாது
6. அதோடு கடுகு, நல்லெண்ணெய் உணவில் சேர்த்துக்கொள்ளகூடாது என்பது குறிப்பிட தக்கது
நன்றி.

Exit mobile version