Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எலுமிச்சையை வைத்து மூட்டு வலியை விரட்டலாம்!! நீண்ட நாள் பிரச்சனைக்கு நொடியில் தீர்வு!!

ஆண்,பெண் என்று அனைவரும் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் வலி,வீக்கம் இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.

வயதானவர்களுக்கு மட்டும் மூட்டு வலி வரும் என்று நினைத்த காலம் போய் தற்பொழுது யாருக்கு மூட்டு வலி வரும் என்று சொல்ல முடியாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த மூட்டு வலி பிரச்சனையை மருந்து,மாத்திரை,சிகிச்சை இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ள இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கப்
2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
3)ஓமம் – ஒரு தேக்கரண்டி
4)பிரண்டை பொடி – ஒரு தேக்கரண்டி
5)சுக்கு பொடி – ஒரு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

ஸ்டெப் 01:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு ஒரு தேக்கரண்டி அளவு பிரண்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி அளவு சுக்கு பொடி சேர்த்து கொதிக்க வைக்க வைக்க வேண்டும்.பிரண்டை மற்றும் சுக்கு பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

ஸ்டெப் 03:

இந்த பானத்தை ஆறவைத்து வடிகட்டி பருகினால் மூட்டு வலிமை அதிகமாகும்.மூட்டு வலி,முழங்கால் வலி குணமாக இந்த பானத்தை வாரம் இருமுறை செய்து குடிக்கலாம்.அல்லது தினமும் டீ,காபிக்கு பதிலாக இந்த பானத்தை பருகலாம்.

மூட்டு வலிக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு எலுமிச்சை விதை இருந்தால் நீக்கிவிட வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள எலுமிச்சையை அதில் வைத்து மூட்டு பகுதியில் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாகும்.

Exit mobile version