லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ?

0
107
#image_title

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படமானது பெரும் எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாகும். இதில் மேலும் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது அக்டோபர் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இப்படத்தின்,படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தனர்.இந்த நிகழ்ச்சியை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டனர், ஆனால் நடிகர் விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம் .

இந்த நிலையில் செப்டம்பர் 30ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் அதிகார பூர்வமான அறிவிப்பை தெரிவித்திருந்தார்.
ஆனால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நேற்று அதனுடைய ட்விட்டர் பக்கத்தில்,”பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும்,கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு”இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தனர். இந்த செய்தியை கேட்ட விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த முடிவை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், அவரது ட்விட்டர் பக்கத்தில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வெறும் 6000 பேர் வருவதற்கான அனுமதி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது என்றும், அங்கு அதிக கூட்டம் வந்து எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால்,அது படக்குழுவுக்கு தான் கெட்ட பெயர் என்று விளக்கமளித்துள்ளார். மேலும் விழாவை ரத்து செய்தது ஒரு நல்ல முடிவு தான் எனப் பதிவிட்டுள்ளார்.