Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லியோ ரிலீஸ் ரத்து..காரணம் சங்கீதாதானாம்..வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

#image_title

லியோ ரிலீஸ் ரத்து..காரணம் சங்கீதாதானாம்..வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய்யின் லியோ ஆடியோ ரத்து என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து புதிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்து விட்டன.

விஜய் நிகழ்ச்சியை ரத்தானதற்கு அவருடைய சில பெர்சனலான விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மனைவியுடன் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். கடைசியாக மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் கூட சங்கீதா வந்திருந்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், விஜய்யின் வாரிசு ஆடியோ ரிலீஸிலிருந்து சங்கீதாவை காணவில்லை. மேலும், அட்லீ- ப்ரியா வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் சங்கீதா வரவில்லை.

மேலும், சமூகவலைத்தளங்களில் விஜய், நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் சங்கீதா சண்டைப்போட்டு பிரிந்து விட்டு சென்றதாகவும் தகவல் வெளியானது. மேலும், சங்கீதா மகன், மகளுடன் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களை இன்று வரைக்கும் விஜய் போன் போட்டு தொடர்பு கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் சஞ்சய் படத்தின் அறிவிப்பில் விஜய் கலந்துக்கொள்ளவில்லையாம். இதற்கிடையில், அரசியலில் விஜய் முழுவீச்சாக இறங்க இருக்க இருப்பதால் அவர் சில விஷயங்களை யோசனை செய்து வருகிறாராம்.

அதனால், லியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சங்கீதா கலந்து கொள்ள பல வழிகளில் விஜய் முயற்சி செய்துள்ளாராம். ஆனால், சங்கீதா பிடிவாதமாக இருக்கிறிராம். சங்கீதா லியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்றால் இன்றும் பிரச்சினை அதிகரித்து விடுமாம்.

எனவே, இது குறித்து விஜய் தரப்பு சங்கீதாவிடம் கோரிக்கை வைத்ததால், நாட்கள் கேட்டு, லியோ ரிலீஸ் ரத்தாகியுள்ளதாக தகவல் சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது.

Exit mobile version