சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்பு உண்டாகும் நாள்!

0
116
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் கலகலப்பு மதியத்திற்குப் பிறகு சலசலப்பு உண்டாகும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மதியத்திற்குப் பிறகு சலசலப்பு உண்டாகும் நாள். சந்திர பகவான் காலையில் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மதியத்திற்குப் பிறகு சந்திராஷ்டமம் தொடர்வதால் சில பிரச்சனைகள் வரும் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது.

கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் கோபம் காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும் . தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று கால தாமதம் ஆகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் செய்யும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.