Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்மம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

சிம்மம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு சனி பெயர்ச்சி ஆகின்றார். சிம்ம ராசிக்காரர்கள் என்றாலே மனதில் அதிக அளவு ஆசைகளை வைத்திருப்பவர்கள். எந்த காரியம் எடுத்தாலும் சிந்தித்து செயல்படக்கூடிய சிம்ம ராசி காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியனாது.

உங்களுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதனால் கண்ட சனி. வீடு, வாகனம் சொத்து போன்றவைகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த காலகட்டத்தில் அவை முடிவுக்கு வரும். உடல் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவை தீர்வுக்கு வரும். மேலும் தந்தை தந்தையுடன் பூர்வீக சொத்து போன்றவைகள் மற்றும் ஆன்மீக சிந்தனை அதிகமாக இருக்கும்.

வெளிநாடுகளுக்கு முயற்சி செய்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்திற்குள் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான பலன்கள் கிட்டும். ஒன்பதாம் இடத்தில் சனி மற்றும் ராகுவின் பார்வை படுவதனால் அளவுக்கு அதிகமான சிந்தனைகள் ஏற்படும். கண்டகச் சனி உங்களுக்கு நடைபெறுவதனால் திருமண தடைகள் நீங்கி வரன்கள் கிடைக்கும்.

வாகனம் சொத்து போன்றவைகளுக்கு கடன் வாங்கி இருந்தால் அவை முற்றிலும் அடைக்கப்படும். அதற்கு உங்களுக்கு இறை சிந்தனை தேவை. குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வரும் மார்ச் மாதம் முழுவதும் எந்த ஒரு காரியத்திலும் கவனம் தேவை. நண்பர்களுடன் கூட்டுத்தொழில் போன்றவைகளில் சற்று கவனம் தேவை.

மார்ச் 17ஆம் தேதியிலிருந்து சதய நட்சத்தில் சனி பகவான் பயணம் செய்வதனால் செவ்வாய்க்கிழமை அன்று ராகு நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

Exit mobile version