Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

#image_title

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சில பிரச்சனைகள் ஓய்ந்து குடும்ப அன்யூனியம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு எதிர் பாராத ஒரு வெளியூர் பிரயாணம் அமையலாம். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகமாக பணிபுரிவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் வருகையால் சந்தோசமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை கையில் எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி ஒரு புத்துணர்ச்சியோடு செயல்படுவார்கள் இன்றைய தினம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்றைய தினம் இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version