சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

0
150
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும்.
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் அனைத்தும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சிறப்பான சூழ்நிலைகள் அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலை நிலவும். வெளிநாட்டு அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அருமையாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.