அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

0
118

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

‘டைட்டானிக் படத்தின் ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் காட்டிற்கு தீவைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதற்கும் 30% ஆக்சிஜனை கொடுக்கும் காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ தற்செயலானது அல்ல என்றும் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருஇறது

இந்த நிலையில் ‘டைட்டானிக்’ பட நாயகன் லியாண்டோ டிகாப்ரியோ இந்த காட்டுத்தீ குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கவலை தெரிவித்ததோடு காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ டைட்டானிக் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்ததாக கூறினார்.. ஆனால் இந்த குற்றச்சாட்டை லியாண்டோ டிகாப்ரியோ மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களது இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில், அமைப்புகளுக்கு நாங்கள் பண உதவி செய்வது கிடையாது. பிரேசில் மக்களின் எதிர்காலத்திற்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்’’ என தெரிவித்துள்ளார்.