Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுமார் 538 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8488 ஆக குறைந்திருக்கிறது. இது சென்ற 538 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும்.

நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தற்போது நோய்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் சதவீதம் 98.31% என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கை இன் விகிதம் 1.35 சதவீதமாகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.34 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

நாட்டில் இன்று காலை 8 மணி நிலவரப்படி  116.87 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது நேற்று மட்டும் 32 லட்சத்து 99 ஆயிரத்து 337 பேருக்கு தடுப்பூசிகள் எழுதப்பட்டிருக்கிறது இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version