அட அவர தூங்க விடுங்கப்பா! ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

0
176

ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றிருந்த அண்ணாமலை 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

இதன் பின்னர் விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வழங்கிய பேட்டியில், ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்விக் கொள்கை. ஹிந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால் தமிழக பாஜக எதிர்க்கும். யார் ஹிந்து, யார் ஹிந்து இல்லை என்று கண்டுபிடிப்பது தான் தற்போது பேஷனாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இந்தி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹிந்தி மொழியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் தான் திமுக 10 வருடங்கள் கூட்டணியில் இருந்தது என்று தெரிவித்துள்ளார். திமுக அரசின் கபட நாடகம்தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் 3 மொழியை படிக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு தெரிவித்து வருகிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் தற்போது வரையில் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினை தூங்க விடுங்க என்று திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் சென்ற அவர் அங்கு நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.