முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

0
180
Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இவ்வாறு இருப்பின் இந்த தொற்று முடிவுக்கு வந்த பாடில்லை.இத்தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் தடுப்பூசி ஏதும் நடைமுறையில் இல்லை.அச்சமயத்தில் பல மனித உயிர்களை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு மக்களும் அதனை செலுத்தி வந்தனர்.

அப்பொழுது குறைந்த பட்ச தொற்று பதிப்பை குறைக்க முடிந்தது.அதனைத்தொடர்ந்து தொற்று பாதிப்பானது வருடம்தோறும் பல்வேறு வகைகளில் பரிமற்றாம் அடைந்து மக்களை விடாமல் துரத்தி வருகிறது.முதலில் சீனா நாட்டில் இருந்த வந்த கொரோனா பிறகு டெல்டா,டெல்டா பிளஸ் ஆக உருமாற்றம் அடைந்தது.அதனையடுத்து தற்போது ஒமைக்ரானாக உருமாற்றம் அடைந்து மக்களிடையே பரவி வருகிறது.அத்தோடு உருமாற்றம் அடைவதை நிறுத்தமால் டெல்டா வகை கொரோனாவும், ஒமைக்ரான் வகை கொரோனாவும் ஒன்றிணைந்து சில நாடுகளில் டெல்மைக்ரானாக பரவி வருகிறது.

இவ்வாறு இருக்கும் சூழலில் நமது இந்தியாவில் இந்த ஒமைக்ரான் பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியது.இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களின் தொற்று பாதிப்பிற்கேற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என கூறி உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் மாநில அரசுகள் தங்களின் தொற்று பாதிப்பிற்கேற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் நமது தமிழக அரசு வார இறுதி நாளன ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கையும் மற்ற நாட்களில் இரவு ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது.

அவ்வாறு வார இறுதி நாட்களில் பல கட்டுபாடுகளை அமல்படுத்தி உள்ளது.அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏதும் ஓடாது,மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை இயங்க மட்டுமே  அனுமதி அளித்துள்ளனர்.அத்தோடு  முன் பதிவு செய்து காரில் செல்லும் முறையை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு செல்ல விரும்புவோர் திருமண பத்திரிக்கையை காட்டி செல்லலாம் என கூறியுள்ளனர்.

அதேபோல உணவகங்களில் பார்சல் வசதியை மட்டுமே அனுமதித்துள்ளனர்.மேலும் இறைச்சி கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லாத காரணத்தினால் சனிக்கிழமைகளில் இறைச்சியை வாங்க சந்தைகளில் மக்கள் அதிகளவு கூட்டம் கூடுகின்றனர்.இதனால் தொற்று அதிகளவு பரவும் அபாயம் ஏற்படும்.இதனை கட்டுப்படுத்த இறைச்சி கடைகள் ஞாயிற்று கிழமைகளில் இயங்கும் என கூறி உத்தரவிட்டுள்ளனர்.