Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 

இளைய தளபதி விஜய் அவரின் பெற்றோரிடம் பேசினால் அவருடன் இணைந்து நடிப்பது பற்றி கூறுகிறேன் என்று பிரபல நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் திரைப்பட உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். அவரிடம் மற்றவருக்கு அதிகம் பிடித்த பண்பு அவரின் எளிமை. அவரிடம் பிடிக்காத ஒன்று உண்டென்றால் அவர் தனது தந்தையிடம் பேசாமல் இருப்பது. இதை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகர் நெப்போலியன் விஜய்யுடன் போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அப்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அன்றிலிருந்து 15 வருடங்களாக இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள நெப்போலியனிடம் ரசிகர் ஒருவர் மீண்டும் விஜயுடன் இணைந்து நடிப்பீர்களா? என கேள்வி கேட்டதற்கு நெப்போலியன் பதில் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் நெப்போலியன் எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது. அன்றிலிருந்து பேசிக் கொள்வதில்லை. சண்டையை மறந்து இணைந்து நடிக்க நான் தயார். அவர் தயாராக இருப்பாரா? விஜய் தனது பெற்ற அப்பா அம்மாவிடமே பேசிக் கொள்வதில்லை. முதலில் அவர்களிடம் பேசட்டும் அதற்குப் பின்னால் இணைந்து நடிப்பது பற்றி பார்ப்போம் என்று பதிலளித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

 

Exit mobile version