டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!

0
86
#image_title

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!

டிடிஎப் வாசன் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டிடிஎப் வாசன் அவர்களின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி செல்லும் பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பைக் வீலிங் சாகசத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் ஈடுபட்டார். அப்பொழுது விபத்து ஏற்பட்டு அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஜாமீன் வேண்டும் என்று டிடிஎப் வாசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை மனு தாக்கல் செய்தும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி டிடிஎப் வாசன் அவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று(அக்டோபர்5) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. டிடிஎப் வாசன் அவர்களின் ஜாமீன் மனுவை நீதிபதி கார்த்திகேயன் அவர்கள் விசாரித்தார்.

அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அவர்கள் “விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடும் டிடிஎப் வாசன் அவர்களின் யூடியூப் சேனலை மூடிவிடலாம். மேலும் டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம்” என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அவர்கள் “விபத்தில் காயமடைந்த டிடிஎப் வாசன் அவர்களுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கலாம்” என்று பேசிய நீதிபதி கார்த்திகேயன் அவர்கள் டிடிஎப் வாசன் அவர்களால் 45 லட்சம் சிறார்கள் தவறான வழிக்கு செல்கின்றனர். டிடிஎப் வாசனின் வீடியோக்களை யூடியூப்பில் பார்க்கும் சிறார்கள் அனைவரும் பைக்கை வேகமா ஓட்டி விபத்து ஏற்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.

மேலும் டிடிஎப் வாசன் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். ஜாமீன் மனு விசாரணையின் பொழுது காவல் துறையினர் “டிடிஎப் வாசன் அவர்கள் விபத்து ஏற்படுவதற்கு காரணம் பைக் வீலிங் செய்தது தான். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை ஒட்டி வந்த டிடிஎப் வாசன் 3 லட்சம் மதிப்பிலான ஹெல்மெட்டை தலையில் அணிந்திருந்ததால் டிடிஎப் வாசன் அவர்கள் உயர் தப்பினார்” என்று கூறினார்.