தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்து பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதனால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கொரோனா பாதிப்பு தற்பொழுது கட்டுக்குள் உள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடைக்கு செல்வதற்கு பதிலாக ,தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை ஒரு ஆண்டு தள்ளிப் போடுவதால் தவறு ஒன்றும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் ஒன்றும் தவறில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் கொரோனாவால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் தற்போது கடைகளில் இருக்கும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் பொருட்களை வாங்க ஆர்வத்துடன் உள்ளார்கள் சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.