நடப்பாண்டில் புது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ள நிலையில், இதனை தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சியும், டெல்லியில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் பாஜக கட்சியும் தேர்தலில் போட்டியிட இவ்விருபவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சட்டமன்ற தேர்தல் புதுடெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரச்சாரங்கள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகின்றன. அங்கு தேர்தல் களம் காண ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தயார் நிலையிலுள்ளது. ஒவ்வொரு கட்சியும் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றன. எனவே டெல்லி தேர்தல் களம் தற்போது ஆடுகளமாக மாறியுள்ளது. போட்டி போட்டு ஒவ்வொரு கட்சியும் தனது பிரச்சாரங்கள் மூலமாக கட்சி பெருமை, எதிர்கட்சியின் குற்றங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தவாறு உள்ளனர்.
ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சியின் கடும் போட்டிகளுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியானது, 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்துவோம் எனவும் மற்றும் ஒரு கேசின் விலை ஆயிரமாக உச்சத்தை தொட்ட நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500 வாக குறைப்போம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது. இது, தற்போது பெரிதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.