Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாய் நாட்டிற்காக எதையும் செய்வோம்! போர்வாள் தூக்கிய பச்சிளம் குழந்தைகள் மிரண்டுபோன உலக நாடுகள்!

சென்ற சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்ய நாட்டுப் படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி உள்ளிட்டவற்றை அமைத்து படையெடுப்பதற்க்காக தயார் நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, போன்ற நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தற்சமயம் 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதோடு உக்ரைனில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் இளம் வயதை சார்ந்தவர்கள் தங்களுடைய நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று தெரிவித்து பயிற்சியில் இறங்கியுள்ளதாக ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இந்த செய்தி உலக அரங்கத்தையே பெரும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Exit mobile version