தற்பொழுது ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வழுக்கை பிரச்சனையை சந்திக்கின்றனர்.சுகாதாரமற்ற நீர்,சுற்றுசூழல் மாசு,ஸ்ட்ரெஸ்,உணவுமுறை வழக்கத்தில் மாற்றம் போன்ற காரணங்களால் அதிகமாக தலைமுடி உதிர்கிறது.
விளம்பரங்களில் காட்டும் எண்ணெய்,ஷாம்பு பயன்படுத்தியும் தலை முடி உதிர்வை மட்டும் குறைந்தபாடில்லை என்று வருந்துபவர்கள் இங்கு ஏராளம்.முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே முடி உதிர்வை சந்தித்து வந்தனர்.ஆனால் இக்காலத்தில் சின்னங்சிறு குழந்தைகளுக்கும் முடி உதிர்வு ஏற்படுகிறது.
பெண்களைவிட ஆண்களுக்கே முடி உதிர்வு அதிகரித்து இளம் வயது வழுக்கை ஏற்படுகிறது.எனவே வழுக்கை வந்த பிறகு தலைமுடி மீது அக்கறை செலுத்துவதை தவிர்த்து முன்கூட்டியே முடியை பராமரித்து வாருங்கள்.
வழுக்கை விழாமல் இருக்க சிறந்த ஹோம் ரெமிடி:
தேவையான பொருட்கள்:-
*சின்ன வெங்காயச் சாறு – 10 மில்லி
*தேங்காய் எண்ணெய் – 30 மில்லி
*வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
*கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
முதலில் இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணம் எடுத்து அரைத்த வெங்காயச் சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பிறகு 30 மில்லி தேங்காய் எண்ணையை ஊற்றி மீண்டும் ஒரு முறை கலந்துவிடவும்.இறுதியாக ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை போட்டு நன்கு கலந்து தலை முழுவதும் தடவி 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
அதேபோல் வடித்த கஞ்சியில் செம்பருத்தி பொடி மற்றும் கற்றாழை ஜெல் மிக்ஸ் செய்து தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் வழுக்கை விழாமல் இருக்கும்.