அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

0
211

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது.செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ காலங்களில் அருமையாக அலங்காரம் ஒன்று செய்யப்படும்.திருக்கோயில் வாயிலை கடந்து உள்ளே சென்றால் அதிகார நந்தி மற்றும் சூரியபகவான் சன்னதி உள்ளது. சன்னதிக்கு இடதுபுறம் தெற்கு நோக்கிய கருவறையில் ஒரு கரத்தில் மலர் தாங்கி, மற்றொரு கரத்தை தொங்கவிட்டு, சற்றே இடையை நெளித்து நின்ற கோலத்தில், புன்சிரிப்பு மிளிர காட்சித் தருகிறார்.இங்கு முக்கிய விழாக்களாக மகாசிவராத்திரி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறும்.

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க செப்பறை நடராஜரை மனதார வேண்டிக் கொள்ளலாம்.கலைநயத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கல்வியில் சிறந்து விளங்க இந்த நடராஜரை வழிபடலாம்.இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் அங்கு வரும் பக்தர்கள் மன அமைதியையும், நிம்மதியையும் பெற்று செல்கின்றனர.