Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது??

Let's see if the kite is flying in the sky!! But chairs are flying in the AIADMK meeting??

Let's see if the kite is flying in the sky!! But chairs are flying in the AIADMK meeting??

வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது??

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அளவிலான அதிமுக சார்பில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.எ முனியசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே சில கொச்சையான வார்த்தைகளால் சரமாரியாக பேசிக் கொண்டிருந்தனர்.

இரு தரப்பினர்களும் ஒருவருக்கொருவரை  தகாத வார்த்தைகளால் ஆர்க்யூமென்ட் செய்து கொண்டிருந்தனர். இனிமை தொடர்ந்து அதிகரித்து சென்றதால் திடீரென்று பேச்சுவார்த்தை கை கலவரமாக மாறியது. இரு தரப்பும் ஒருவருக்கொருவர் அடிதடியில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி அவர்களை உயர்ந்தவர் என்றும் மறு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தான் உயர்ந்தவர் என்றும் கூறினார்கள்.

பின் அமர்ந்திருந்த நாற்காலிகளைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் சில தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் சிலர் கல்களை எரிந்தும் தாக்கினார். இதனால் அதிமுக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைந்தது. மேலும் இக்கூட்டத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இரு தரப்பும் தாக்கிக் கொண்ட காட்சி முகநூலில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Exit mobile version