மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம். 

0
69
#image_title

மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். இதில் சில வகை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை பாய்சனாக மாறும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்பட்டு ஆரோக்கியம் கெடும் என்ற முறையாக தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

*நாம் அதிகம் விரும்பி உண்ணும் உணவு பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் அதிகளவு புரோட்டீன் இருப்பதால் இதை மீண்டும் சூடு படுத்தினால் அவை நஞ்சாக மாறி விடும். இவ்வாறு சூடுபடுத்தி சாப்பிடும் காளானால் உடலில் செரிமானக் கோளாறு, வயிறு உபாதை, வயிறு உப்பசம் உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது.

*அதேபோல் நாம் அதிகம் ருசி பார்த்து வரும் முட்டையில் அதிகளவு ப்ரோட்டீன் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவ்வாறு இருக்கையில் இந்த முட்டையில் சமைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆரோக்கியம் நிறைந்த முட்டை பாய்சனாக மாறி விடும். இதனால் வயிறு உப்பசம், உடல் எடை கூடல், வாயுத் தொல்லை, குடல் பாதிப்பு உள்ளிட்டவைகளை சந்திக்க நேரிடும்.

*நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு என்றால் அலாதி பிரியம். இதில் வறுவல், பொரியல், குழம்பு, சில்லி, சிப்ஸ், ப்ரை என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. உருளைக் கிழங்கில் சமைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதில் உள்ள ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் அழிந்து செரிமான பாதிப்பு, வாயுத் தொல்லை உள்ளிட்டவை ஏற்படும்.

*அனைவருக்கும் பிடித்த அசைவங்களில் ஒன்று கோழிக்கறி. இதை ஒரு போதும் சூடுபிடித்து உண்ணக் கூடாது. அவ்வாறு செய்து சாப்பிட்டால் மந்த நிலை, செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை உள்ளிட்டவை ஏற்ப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

*சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு கீரை. இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது கீரை வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அவ்வாறு இருக்கையில் இந்த கீரை உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை நஞ்சாக மாறிவிடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? கீரை உணவை மீண்டும் சூடுபிடித்து சாப்பிட்டால் கேன்சர், செரிமானப் பிரச்சனை, வயிறு உப்பசம் உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

*இரத்தம் தொடர்பான பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருப்பது பீட்ரூட். இதில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இதை வைத்து செய்யப்பட்ட உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிடும்.