Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமா ஷூட்டிங் தொடங்கலாம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு! 

கொரோனா பாதிப்பினால்  சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது  சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலேயே சில மாநிலங்களில் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டு நிலையில்  சுதீப் நடிக்கும் பாண்டம், கே.ஜி.எஃப் சாப்டர் 2 உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் அடுத்த மாதம் சினிமா படப்பிடிப்பிற்கான அனுமதி வழங்கப்படும்  என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு சினிமா படப்பிடிப்புக்கான சில வழிமுறைகளை விதித்துள்ளது அதில் கூறியதாவது:  படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தவிர மற்ற அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

உபகரணங்களை கையாளும் படப்பிடிப்பின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும். அணியவேண்டும் படப்பிடிப்பு 6 அடி சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மிகக் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும்  பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்கான வழிமுறைகளை முன்பே செய்து வைக்கவேண்டும். மேலும் பொது இடத்தில் எச்சில் துப்பக் கூடாது என்றும் மேக்கப் கலைஞர்கள் கண்டிப்பாக பிபிஇ கிட் பயன்படுத்த வேண்டும் மேலும் படப்பிடிப்புக்கு என்று உபயோகிக்கப்படும் அறைகள் அனைத்திற்கும் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சினிமா படப்பிடிப்புக்கு என நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

Exit mobile version