இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்!
தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே தான் உள்ளனர். இதனால் மீன் பிடிக்கச் செல்வோர் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், தலைமுறை தலைமுறையாக மீன் பிடி தொழிலே வாழ்க்கை என்று நம்பி உள்ள ஒட்டு மொத்த மீனவர்களிடையே அச்சத்தையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.எனவே நீங்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.