முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?

0
168

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?

முடக்கத்தான் கீரையை முடக்கம் அதாவது முடக்குவாதம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு முடக்குவாதம் பிரச்சனை குணமாகி விடும். இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாகும். இந்த முடக்கத்தான் கீரை சாதாரணமாக கிரமாங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இந்த முடக்கத்தான் கீரையை சமையலில் பல வகைகளில் பயன்படுத்தலாம்.

முடக்கத்தான் கீரையில் மாவு அரைத்து முடக்கத்தான் தோசை சுட்டு சாப்பிடலாம். முடக்கத்தான் சூப் செய்து குடிக்கலாம். முடக்கத்தான் ரசம் செய்தும் முடக்கத்தான் துவையல் செய்தும் நாம் உணவில் பயன்படுத்தலாம்.

முடக்கத்தான் கீரையில் நார்ச்சத்துக்கள், கால்சியம், புரதச் சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கார்போஹைட்ரோட், தாதுப்புகள்போன்ற உடலுக்கு தேவையான அனைத்துச்சத்துகளும் உள்ளது. இதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரையின் நன்மைகள்…

* தொடர்ந்து முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம் குணமாகும். அது மட்டுமில்லாமல் முடக்குவாதம் ஏற்படாது.

* தொடர்ந்து முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

* முடக்கத்தான் கீரையில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேலும் எலும்புகளை பலப்படுத்துக்கின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

* பாதவாதம் பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாத வாதம் குணமாகும்.

* வாயுத் தொல்லை இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை சரியாகும்.

* இந்த முடக்கத்தான் கீரையை மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்கள் சாப்பிட்டால் நல்ல பயன் கொடுக்கும்.

* முடக்கத்தான் கீரை மூல நோய்க்கு நல்லது. எனவே மூலநோய் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

* மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டுவலி குணமாகும்.