தற்பொழுது வயதானவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் முடக்குவாத நோய் அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த முடக்கு வாத நோய் குணமாக தினசரி உணவில் முடக்கத்தான் கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
1)முடக்கத்தான் கீரை – ஒரு கப்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)மிளகு – அரை தேக்கரண்டி
4)கறிவேப்பிலை – ஒரு கொத்து
5)தக்காளி – ஒன்று
6)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
7)புளி – ஒரு எலுமிச்சை அளவு
8)உப்பு – தேவையான அளவு
9)சின்ன வெங்காயம் – பத்து
10)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
11)வர மிளகாய் – மூன்று
12)பூண்டு – 10 பற்கள்
13)கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கப் முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மிளகு,சீரகம் மற்றும் வர மிளகாயை உரலில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கடுகு போட்டு பொரிந்த உடன் கறிவேப்பிலை,வெங்காயம் மற்றும் பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து முடக்கத்தான் கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு மிளகு சீரக விழுதை அதில் கொட்டி வதக்கி எடுக்க வேண்டும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள புளியை அதில் ஊற்றி கரண்டி கொண்டு கலக்கவும்.அடுத்து மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேகவிட வேண்டும்.
இறுதியாக வாசனைக்காக கொத்தமல்லி தழை தூவினால் முடக்கு வாதத்தை போக்கும் முடக்கத்தான் ரசம் தயார்.இந்த முடக்கத்தான் ரசத்தை தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
மூட்டு வலி,எலும்பு பலவீனம் போன்றவை குணமாக முடக்கத்தான் கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.