Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

#image_title

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

நாம் உண்ணும் உணவு ஆரோக்யம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து எளிதில் தப்பிவிட முடியும்.

கீரைகளில் மணத்தக்காளி கீரை,அகத்தி,சிறு கீரை,முருங்கை கீரை, வெந்தயக்கீரை, முளைக்கீரை,மணத்தக்காளி கீரை,பாலக் கீரை என்று பல வகைகள் இருக்கிறது.இந்த கீரைகளை வாரத்தில் 2 அல்லது 3 முறை எடுத்து வருவது மிகவும் அவசியம்.இந்த கீரைகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட மூக்கிரட்டை கீரை பற்றிய தொகுப்பு இதோ.

இந்த கீரை கிராமப்புறங்களில்,தெருவோரங்களில் நன்கு வளரக் கூடியவை.இந்த கீரையை பலர் பார்த்திருப்போம்.ஆனால் இதன் பெயர் தெரியாமல் இருக்கும்.நாம் கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கும் இவை ஒரு மூலிகை கீரை ஆகும்.

மூக்கிரட்டை கீரையில் அடங்கி இருக்கும் மருத்தவ குணங்கள்:-

*வாரத்தில் 2 அல்லது 3 முறை மூக்கிரட்டை கீரையின் சாற்றை பருகி வந்தால் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுகள்,இரத்தம் உரைத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.

*அதிக உடல் பருமன் இருப்பவர்கள் மூக்கிரட்டை கீரையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகள் வெறியேறி உடல் ஆரோக்யமாக இருக்கும்.

*பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பாதிப்பு நீங்க மூக்கிரட்டை கீரையில் ஜூஸ் செய்து பருகுவது நல்லது.

*செரிமான கோளாறு,மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மூக்கிரட்டை கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.

*ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மை குணப்படுத்த இந்த கீரை பெரிதும் உதவுகிறது.

*உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள வாரத்தில் ஒருமுறை மூக்கிரட்டையில் கஷாயம் செய்து பருகுவது நல்லது.

*சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற மூக்கிரட்டை கீரையில் கஷாயம் செய்து பருக வேண்டும்.

*மாலைக்கண் நோய் பாதிப்பு இருப்பவர்கள் 1/2 கிளாஸ் பசும்பாலில் 2 தேக்கரண்டி அளவு மூக்கிரட்டை கீரையின் சாறை கலந்து பருகினால் அந்த பாதிப்பு முழுமையாக குணமாகிவிடும்

Exit mobile version