Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை!

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை!

பெரும்பாலும் இந்த குறிஞ்சாக் கீரையை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.குறிஞ்சா இலைகள் வெற்றிலையை போன்றே இருக்கும்.இதுவும் ஒரு கொடிவகை தாவரமாகும்.இந்த குறிஞ்சாக்கீரை, பாவக்காய் போன்ற சற்று கசப்பாக இருப்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை.
குறிஞ்சாக் கீரையில் இரண்டு வகை உண்டு.அவை சிறுகுறிஞ்சான் மற்றும் பெரு குறிஞ்சானாகும்.
இவை புதர்களில் தானாகவே வளரும் இயல்புடைய ஒரு மூலிகை கீரையாகும்.

குறிஞ்சாக் கீரையில் நன்மைகள்!

இந்த குறிஞ்சாக்கீரையானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.குறிஞ்சாக் கீரையை வாரத்தில் இரண்டு முறை நாம் சாப்பிட்டு வந்தால்,அதிகளவில் இன்சுலின் சுரப்பதை தடுத்து வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும்,சர்க்கரை நோய் வந்தவர்கள் இதனை சாப்பிடுவதால் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் இந்த கீரை அரு மருந்தாக பயன்படுகின்றது.

இந்த கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள குடற்புழுக்கள் செத்து மடியும்.

அல்சர் உள்ளவர்கள்,இரவில் குறிஞ்சாக் கீரையை சுடுதண்ணீரில் போட்டு அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அப்படியே விட்டு விட வேண்டும். இந்த தண்ணீரை காலையில் எடுத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரண்டே நாட்களில் அல்சர் என்னும் குடற்புண்கள் முற்றிலும் ஆறிவிடும்.கீரையாக சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த கசாயத்தை வாரம் இரண்டு முறை குடித்து வருகையில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

 

Exit mobile version