Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துலாம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

துலாம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு சனி பெயர்ச்சி ஆகின்றார்.

எதிலும் தன் குடும்பத்திற்காக உழைத்து நீதி, நேர்மையாளராக இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நான்காம் இடத்தில் அஷ்டாத்தம சனியாக குடும்ப ஸ்தானத்தில் இருந்து தற்போது ஐந்தாம் இடத்திற்கு பூர்வ புண்ணிய இடத்திற்கு செல்வதினால் உங்கள் ஆழ் மனதிற்குள் சனிபகவான் செல்கின்றார்.

ஐந்தாம் இடத்தில் பலமாக இருக்கின்றார். பொதுவாக யாரையும் ஏமாற்றும் குணம் துலாம் ராசிக்காரர்களுக்கு இருக்காது. உங்களுக்கு சனிபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றார். திருமணத்திற்கு முதலடி எடுத்து வைக்க இதுவே சிறந்த காலமாக அமையும்.

பயணங்களை குறிக்கக்கூடிய ஏழாம் இடத்தை சனிபகவான் பார்க்கின்றார். மன தைரியம் மனதில் உற்சாகம் போன்றவை பிறக்கக்கூடிய காலமாக உள்ளது. ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் உழைப்பே இல்லாமல் வருமானம் வந்து சேரும்.

எத்தனை நாட்களாக நீங்கள் வேண்டிய தெய்வங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க உள்ளது. மேலும் அந்நிய பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.

பிறகு 11வது இடமான லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதினால் உங்கள் மனதில் ஏற்படும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும். படிக்கும் மாணவ மாணவர்களுக்கு சாதகமாகவே மதிப்பெண்கள் கிடைக்கும்.

போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். படிக்காத மாணவ மாணவிகளுக்கு சற்று அறிவு கூடுதலாக கிடைத்து படிப்பில் வெற்றி காண உள்ளனர். இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்கள் அனைத்துமே துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

குறிப்பாக ஜனவரி 17ஆம் தேதிக்கு பிறகு திடீர் யோகங்கள் கிடைக்கும். வியாழன் கிழமை தோறும் விநாயகரையும் குரு பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும். அவர் செய்து வந்தால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தடைகள் நீங்கும்.

 

Exit mobile version