Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்!

Libra – Today's Horoscope!! A day to act with caution!

Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள். குடும்ப உறவுகளின் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதனை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சில நேரங்களில் குறையலாம் என்பதால் கவனம் அவசியம்.

வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் வேண்டும். சில நேரங்களில் இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கவனமாக இருப்பது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதற்கு காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் செய்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.

Exit mobile version