டிசம்பர் 9 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எல்ஐசி பீமா சகி திட்டத்தை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
எல் ஐ சி பீமா சகி திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் :-
✓ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
✓ 18 வயது முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
✓ ஒருவர் ஏற்கனவே எல்ஐசி முகவராக அல்லது பணியாளராக இருந்தால், அவரது உறவினர் (கணவன்/மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள்) இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
✓ எல்ஐசியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர் அல்லது முன்னாள் முகவர் அல்லது தற்போதைய முகவர் எல்ஐசி பீமா சகி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு சில உதவித்தொகை அதாவது சம்பளமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ முதல் வருடம் மாதம் 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
✓ இரண்டாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 6,000 ரூபாய் வழங்கப்படும்.
✓ மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வழங்கப்படும்.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள எல்ஐசி கடைகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.