உங்கள் குழந்தையின் திருமண வயதில் 3 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!! உடனே அப்ளை பண்ணுங்க!!
நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(LIC) உள்ளது.சேமிப்பு திட்டங்கள்,கடனுதவி,காப்பீட்டு திட்டங்கள் என்று பலவகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் LIC நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு கன்யாதன் என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள் ஆகும்.இந்த திட்டத்தில் சேமிப்பு தொடங்கும் பெண் குழந்தையின் தந்தைக்கு அதிகபட்ச வயது 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.கன்யாதன் திட்டத்தில் பாலிசி எடுத்திருக்கும் தந்தை இறந்துவிட்டால் அவரின் குடும்பத்திற்கு ரூ.10,00,000 இழப்பீடாக வழங்கப்படும்.பாலிசி தாரரின் மகள் பயனடையும் ஆண்டுக்கு ரூ.50,000 நிதி வழங்கப்படும்.
இந்த கன்யாதன் திட்டடத்தில் சேமித்து தினமும் ரூ.75 சேமித்து வந்தால் பாலிசி எடுத்த நபரின் பெண் பிள்ளையின் திருமண வயதின் போது ரூ.1,450,000 கிடைக்கும்.அதுவே தினமும் ரூ.151 சேமித்து வந்தால் மகளின் திருமண வயதின் போது ரூ.3,100,000 கிடைக்கும்.இந்த திட்டத்தில் இந்திய குடிமகன்கள் மட்டுமல்ல இந்திய குடிமகன்கள் அல்லாதவரும் பாலிசிதாரர் ஆகலாம்.
மேலும் 22 ஆண்டுகள் பாலிசி திட்டத்தில் தங்கள் மகள் பெயரில் ரூ.3,600 செலுத்தி வந்தால் 25 ஆண்டுகள் கழித்து ரூ.26 லட்சம் பாலிசி தொகை கிடைக்கும்.