LIC:LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது.
LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் LIC என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது இந்திய மக்களின் நம்பிக்கைகுறிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவது பல லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மக்களின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆகும். இந்த நிலையில் தான் LIC- யின் இணையதளத்தில் முகப்பு முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் LIC- யின் இணையதள பயன்பாட்டுக்கு மாற்று மொழியாக ஆங்கிலமும் மராத்தியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆங்கில மொழியை தேர்வு செய்வதற்கான PoP UP நோட்டிஃபிகேஷன் இந்தி மொழியில் (பாஷை) என்ற வார்த்தை தான் வருகிறது. இந்தி மொழி தெரியாதவர்கள் LIC- யின் இணையதளத்தை பயன்படுத்த திணறி வருகிறார்கள்.மேலும் இந்த இணையதளத்தில் ஆங்கில மொழி தேர்வு செய்ய இந்தியில் PoP UP நோட்டிஃபிகேஷன் வருகிறது.
மேலும் இந்தி மொழி தேர்வு செய்ய ஆங்கிலத்தில் PoP UP நோட்டிஃபிகேஷன் வருகிறது. இதனால் பொதுமக்கள் LIC- யின் இணையதளத்தை பயன்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.