Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு பதிலா படுத்து தூங்குங்க…. சர்ச்சையை ஏற்படுத்திய சீமான்..!

#image_title

இவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு பதிலா படுத்து தூங்குங்க…. சர்ச்சையை ஏற்படுத்திய சீமான்..!

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களை ஓட்டுப்போட வேண்டாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 20 ஆண், 20 பெண் வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.

இவர்களை ஆதரித்து சீமான் வெறித்தனமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் திருப்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அதன்பட் அவர் கூறியதாவது, “ராமர் என்ற ஒருவர் இருந்தால் பாஜக ஒரு இடத்தில் கூட நிச்சயம் ஜெயிக்காது.

சிங்கத்தை சிங்கம் என்று அழைப்பதே அதற்கு தெரியாது. இதில் சிங்கத்திற்கு அக்பர் என்று பெயர் வைத்து விட்டதாக இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். ஏப்ரல் 19 ஆம் தேதி நீங்கள் ஓட்டுப்போடாமல் வீட்டில் படுத்து கூட தூங்குங்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் ஓட்டுப்போடாதீர்கள்” என கூறியுள்ளார்.

தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் போராடி வரும் நிலையில், மக்களை ஓட்டுப்போடாமல் படுத்து தூங்குங்கள் என்று சீமான் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version