நம் உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் என்ற ஊட்டச்சத்து அவசியமான ஒன்றாக விளங்குகிறது.உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள்,விளையாட்டு வீரர் வீராங்கனைகள் புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.
உடலில் புரத குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் அதை பூர்த்தி செய்ய போதிய புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த புரோட்டீன் சத்து ஆரோக்கிய உணவுகள் மூலம் கிடைக்கும்.
ஆனால் இன்று பெரும்பாலனோர் புரோட்டீன் பவுடரை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.ஒருவர் நீண்ட தினங்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் அது உடலில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
சரியான அளவில் புரோட்டின் பேக் எடுத்துக் கொண்டால் ஆபத்து இல்லை.ஆனால் அளவிற்கு அதிகமாக புரோட்டின் பேக் எடுத்துக் கொண்டால் தான் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
தொடர்ந்து புரோட்டின் பவுடர் எடுத்துக் கொள்வதால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.அதிக புரோட்டீன் பேக் எடுத்துக் கொள்வதால் உடலில் செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
நீங்கள் அதிகமாக புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் முகப்பரு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.அதிகளவு புரோட்டீன் பவுடர் உட்கொண்டால் உடலில் பிஹெச்(pH) அளவு அளவு குறையும்.
தொடர்ந்து புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் சிறுநீரகம் கடுமையாக செயலிழக்க வாய்ப்பிருக்கிறது.சிறுநீரகத்தில் கற்கள் உருவாக இது வழிவகுத்துவிடும்.அதிகளவு புரோட்டீன் பவுடர் உட்கொண்டால் அது உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாகி விடும்.
எனவே தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு மட்டும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்வது நல்லது.
புரதச்சத்து நிறைந்த உணவுகள்:
முட்டை,பருப்பு வகைகள்,அசைவ உணவுகள்,பால் பொருட்கள்,சோயா பொருட்கள்,பாதாம்,பீன்ஸ்,கொண்டைக்கடலை,பழ வகைகளில் அதிகளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டாலே உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைத்துவிடும்.
அதேபோல் பாதாம்,துவரை,பாசி பருப்பு, விதை,வேர்க்கடலை போன்ற பொருட்களை கொண்டு வீட்டிலேயே இயற்கையான முறையில் புரோட்டீன் பவுடர் தயாரித்து பயன்படுத்தலாம்.