Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயிருக்கே உலைவைக்கும் உணவுகள்!! இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!!

உடல் ஆரோக்கியமாக இயங்க உணவு முக்கியமான ஒன்றாக உள்ளது.தண்ணீர் மற்றும் உணவு இன்றி நீண்ட காலம் உயிர் வாழ முடியாது.உடலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு உணவு நல்லதோ அதேபோல் தான் சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவருகிறது.

இன்றைய காலத்தில் ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது கலாச்சாரமாக மாறிவிட்டது.இதில் இருந்து மனிதர்கள் எவ்வளவு சோம்பேறிகளாகிவிட்டனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ்,ஓவன் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.மீதமான உணவுகளை பிரிட்ஜில் பதப்படுத்தி ஓவனில் ஹீட் செய்து சாப்பிடும் பழக்கத்தால் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர்.

இதனால் மருந்தாக வேண்டிய உணவுகள் நஞ்சாக மாறிவிடுகிறது.இந்நிலையில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்னெ என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

1)காளான்

அசைவ உணவுகளே தோற்றுப்போகும் அளவிற்கு சுவையை கொண்டுள்ள காளானில் பிரியாணி,கிரேவி,சில்லி போன்றவை செய்யப்படுகிறது.

இந்த காளானில் செலினியம்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் இந்த காளானை சமைத்த பிறகு மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உட்கொண்டால் அவை பாய்சனாக மாறிவிடும்.

2)முட்டை

புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் முட்டையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை விஷமாக மாறிவிடும்.

3)கீரை

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் கீரைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை புட் பாய்சனை ஏற்படுத்திவிடும்.

4)உருளைக்கிழங்கு

அசைவ சுவையை ஒத்திருக்கும் உருளைக்கிழங்கு கொண்டு சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை பாய்சனாக மாறிவிடும்.

5)கோழி இறைச்சி

அனைவரும் விரும்பும் இறைச்சியில் கோழி முதன்மை இடத்தில் இருக்கின்றது.இந்த கோழி இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாய்சனாக மாறிவிடும்.

Exit mobile version