குழந்தை இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!!
அமெரிக்கா நாட்டின் ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் தம்பதி உலகில் வாழும் அதிக வயதான தம்பதியராக கின்னஸ் சான்றிதழ் மூலம் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு காதலுக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்கள் இருவரும் முதன்முதலாக, 1934 ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஜான் தனது காதலை வெளிப்படுத்த சார்லோட்டிடம் மலர்கொத்தை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டார். இருவரும் இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் வாழ்க்கை 100 வயதுகளை தாண்டி உண்மையான அன்பை பறைசாற்றுகிறது.
இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள், தங்களது 80 ஆவது திருமண நாளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டாடினர். திருமண பந்தம் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை முக்கிய காரணமாக சொல்கிறார்கள். இவர்களின் காதல் வாழ்க்கையை கடந்த ஆண்டு அமெரிக்க ஊடகங்கள் மிக அழகாக வர்ணித்து வெளியிட்டிருந்தன.
இந்த அழகான காதல் ஜோடி அடிக்கடி கடந்தகால நிகழ்வுகளை பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாக ஜோடியை பற்றி அறிந்தவர்கள் கூறியிருந்தனர்.
தனது காதல் வாழ்க்கையை அன்பால் நிரப்பி இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்துவந்த இவர்களுக்கு கடவுள் குழந்தை பாக்கியத்தை தராமல் போனது துரதிஷ்டமே. குழந்தை இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைக்காமல் இருவரும் அன்போடு 80 ஆண்டுகாலத்தை கடந்தது வியப்பான ஒன்றுதான்.
கடந்த ஆண்டு இவர்களின் காதலை உலகமே போற்றியது. உலகமே அன்பால்தான் இயங்குகிறது என்பதற்கு, இவர்களின் காதல் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும்.