Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னது செவ்வாய் கிரகத்தில் உயிரினமா?? ஆய்வு செய்ததில் உறைந்து போன விஞ்ஞானிகள்!!

என்னது செவ்வாய் கிரகத்தில் உயிரினமா?? ஆய்வு செய்ததில் உறைந்து போன விஞ்ஞானிகள்!!

 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நாசாவால் செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து ஆய்வு பணியை செய்து வருகிறது.அப்போது

நாசாவின் பெர்சவெரன்ஸ் ரோவர் தரையிறக்கப்பட்ட தளத்தில் அவ்வியந்திரம் ஒருவித பாறையைக் கண்டுபிடித்துள்ளது. அது அப்பகுதியில் உள்ள பழம்பெரும் பாறைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை கண்டறியும் பணியும் இந்த ரோவர் செய்து வருகிறது. இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் ஏரியாக இருந்த பகுதியில் உள்ள 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறை ஒன்றை துளையிட்டு அதில் இருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவர் சேகரித்தது.

 

கியூரியாசிட்டியின் உள்ளே அமைக்கப்பட்ட சிறிய ஆய்வகத்தில் பாறை துகள்கள் அதிக வெப்பத்தினால் சூடாக்கப்பட்டு அதன் அணுக்களை ஆய்வு செய்யப்பட்டது.அதில் உள்ள ஆர்கானிக் கார்பனின் அளவு தெள்ளத்தெளிவாக அளவிடப்பட்டது . உயிரினங்கள் உருவாக ஆர்கானிக் கார்பன் அடிப்படை தேவை என்பதால் அதை பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றனர்.

Exit mobile version