கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை! காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு!
தேனி மாவட்டம், தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக பேச்சியம்மாள் என்பவர் தன்னுடைய மகன் அழகுராஜா என்பவரை கொலை செய்துவிட்டதை தொடர்ந்து தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கு 20.06.2022-ம் தேதியன்று தேனி மாவட்டம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையின் முடிவில் நீதிபதி K.சிங்கராஜ்,B.Com,LLB, அவர்கள் தென்கரை காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் பேச்சியம்மாள் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்யப்பட்டது.
மேலும் சட்டப்பிரிவு 302 IPC-ன் படி ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000/- அபராதமும் , அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் .சிவக்குமார்,B.A,B.L., அவர்களுக்கும், சிறப்பாக புலன் விசாரணை செய்த முன்னாள் தென்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் .ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், விசாரணை சிறப்பாக நடைபெற அனைத்து ஆவணங்களையும் உரிய நேரத்தில் சமர்ப்பித்த தற்போதைய காவல் ஆய்வாளர்.P.அன்னமயில் அவர்களுக்கும், மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற பெண் காவலர் ரெங்கம்மாள் அவர்களுக்கும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.