இஞ்சினியரிங் படித்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்!!! சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேட்டி!!!

0
122
#image_title

இஞ்சினியரிங் படித்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்!!! சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேட்டி!!!

தற்பொழுது இஞ்சினியரிங் படித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சந்திரயான1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேசியுள்ளார்.

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் அழைக்கப்பட்டார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் எதிர்காலத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் செயற்கை கோள்கள் மூலமாக இயங்கும் செல்போன்கள் வர உள்ளதாகவும் பேசினார்.

மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மாணவர்கள் மத்தியில் “இன்ஜினியரிங் படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் தற்பொழுது உருவாகி வருகின்றது. குறிப்பாக நமது நாட்டை பார்த்தே இந்த வேலை வாய்ப்புகள் அமைகின்றது. அதாவது ஜப்பான் நாட்டில் இளைஞர்கள் வளம் குறைவாகத்தான் இருக்கின்றது. எனவே அங்கிருந்து வரும் வேலை வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கம்பியூட்டர் கோடிங் என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இன்ஜினியரிங் படிப்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகின்றது.

அடுத்து விண்வெளி புரட்சி வரவுள்ளது. கூடிய விரைவில் செல்போன் டவர்கள் இல்லாமல் செயற்கை கோள்கள் மூலமாக இயங்கும் செல்போன்கள் வரவுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் உலகின் மிகச்சிறந்த ராக்கெட் ஏவுதளமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் வர்த்தக ரீதியாக அடுத்தடுத்து செயற்கை கோள்களை அனுப்பும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

நிலவை நோக்கிய பயணங்கள் தற்பொழுது பல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ளது. தொடர்ந்து நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி முலமாக வெப்பமயமாதலை தடுக்க வழி கிடைக்கும். அடுத்தகட்ட ஆராய்ச்சி நிலவை மையமாக வைத்துத்தான் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நிலவில் இருக்கும் கனிமங்கள் பலரது தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது. அதாவது நிலவில் இருக்கும் கனிமங்களை பூமிக்கு எடுத்து வந்தால் பல பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியை உலகநாடுகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனித்து வருகின்றது. விண்வெளித் துறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வெற்றியை போலவே விவசாயத் துறையிலும் மாபெரும் மாற்றம் மற்றும் வெற்றி ஏற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் ராக்கெட் தொழில்நுட்பம் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பத்திரமாத சென்று வர வாய்ப்புகள் இருக்கின்றது. நிலவிற்கு செல்வதற்கு பிற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நாடுகளும் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் செயல்பட வேண்டும். மேலும் அனைத்து நாடுகளும் சேர்ந்து நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க செயல்பட வேண்டும். அவ்வாறு சர்வதேச விண்வெளி மையம் நிலவில் அமையும் என்றால் அதை சந்திரயான் 3 இறங்கிய இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளோம்” என்று பேசினார்.