Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

#image_title

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

பணம் இல்லாதவரை பிணத்திற்கு சமமாக பார்க்கும் நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் தான் முக்கியமா? பணம் இல்லாமல் வாழ முடியாதா? என்ற டைலாக் படத்திற்கு மட்டும் தான் செட் ஆகும். நிஜ வாழ்க்கையில் பணம் தான் மனிதர்களை இயக்குகிறது.

இந்த பணத்தை சம்பாதிக்க நாமும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நம் கைக்கு சம்பள பணம் வருவதற்கு முன்னர் 1000 செலவுகள் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த செலவுகளை சமாளித்து பணத்தை சேமிப்பது என்பது எளிதற்ற ஒன்று. எனவே பண வரவு அதிகரிக்க, பணம் கையில் தங்க வீட்டு பூஜை அறையில் ஒரு எளிய பரிகாரம் செய்யுங்கள்.

இதற்கு முதலில் வீட்டு பூஜை அறையில் ஒரு செம்பு உலோகத்தால் ஆன தட்டை வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு முழு இலவங்கம் மற்றும் ஒரு கற்பூரத்தை வைக்கவும். அடுத்து அதன் மேல் ஒரு விளக்கு வைத்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும். பிறகு தீபத்திற்கு அடியில் வைக்கப்பட்ட இலவங்கம் மற்றும் கற்பூரத்தை பற்ற வைக்கவும். அவை முழுமையாக எரிந்த பின்னர் அதன் சாம்பலை வீடு முழுக்க தூவி விடவும். இவ்வாறு செய்தால் பண வரவு அதிகமாகும்.

Exit mobile version