ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

0
174
link-aadhaar-to-ration-card-immediately-otherwise-name-deletion-of-children-tamilnadu-government-action-order

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு போன்றே வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வகையில் ரேஷன் கார்டு அமல்படுத்தப்பட்டது.அந்தவகையில் தற்பொழுது ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு மூலம் எண்ணற்ற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் இதனை தவறாகவும் உபயோகித்து வருகின்றனர். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிக அளவு சலுகைகள் கிடைக்கிறது என்று, ஒருவர் பெயரிலேயே வேறு வேறு இடங்களில் ரேஷன் கார்டு வாங்கி அதன் மூலம் பல சலுகைகளை பெற்று விடுகின்றனர்.

இதனை தடுக்கும் விதத்தில் தான் தமிழக அரசு ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த வகையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஆதார் கார்டு இல்லை என்றால் அவர்களது பிறப்புச் சான்றிதழ் வைத்து இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு இருக்கும் சூழலில் ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளின் பெயர்கள் ரேஷன் கார்டு அட்டையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளது. எனவே ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லை என்றாலும் அவர்களின் பிறப்பு சான்றிதழ் வைத்து இணைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

ஒவ்வொரு நியாய விலை கடை ஊழியர்களும் அந்ததந்த கடைக்குட்பட்ட ரேஷன் அட்டைதாரர்களை தொடர்பு கொண்டு  குழந்தைகளின் ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் இணைப்பு குறித்து கூற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.