Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குரு இதை செய்யவில்லையென்றால் அவ்வளவுதான்! அதிரடி முடிவெடுத்த வருமானவரித்துறை!

Pan எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முன் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இணைக்கப்படாத அனைத்து பான்கார்டுகளுக்கும் செல்லாததாக அறிவிக்கப்படும். அண்மையில் cbdt அறிவித்திருந்தது ஆனாலும் மார்ச் மாதத்திற்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமலிருந்ததால் காலக்கெடு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

அதாவது 2023 மார்ச் 31 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால் வருமானவரிச் சட்டம் 272 N பிரிவின்படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை மாதம் 1-ஆம் தேதிக்கு மேற்பட்டு அபராத தொகை 1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு 500 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இணைக்கவில்லையென்றால் ஆதார் இணைக்காத பான்கார்டுகளுக்கு அபராதத் தொகை 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத அபராதம் செலுத்துவதற்கு ITNS 280 மேஜர் ஹெட் 0021 என்ற சலாம் என்னை பயன்படுத்தி செலுத்தலாம். அடுத்தமாதம் அபராதம் செலுத்துவதற்கு ITNS 280 மைனர் ஹெட் என்ற சலான் எண்ணை பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது.

பான் கார்டு செயலிழந்துவிடும் என்று தெரிவித்து வந்த நிலையில் அபராதம் செலுத்தி ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதோடு மட்டுமல்லாமல் பான்கார்டு இணைக்கும் காலத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் நீட்டித்திருப்பது பலருக்கு உதவிகரமாக இருக்கும்.

வங்கி கணக்கு தொடங்குவதற்கு பங்கு பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது ரொக்க பரிவர்த்தனைகள், வீடு, பதிவு செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை.

வருமானவரித்துறை சட்டம் 272B பிரிவின்படி பான் எண்ணை இணைக்க வேண்டிய ஒவ்வொரு முறையும் செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை எனும போது நீங்கள் 10,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது

Exit mobile version